தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100 நாள் வேலைத்திட்டத்தில் கூலி உயர்வுக்கு பரிசீலனை செய்யப்படும் - அமைச்சர் பெரியகருப்பன் - கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் ஆய்வு மேற்கொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் 100 நாள் வேலைத்திட்டத்தில் 300 ரூபாய் கூலி உயர்த்தித் தரப்படும் எனத் தெரிவித்தார்.

f
f

By

Published : Jul 22, 2021, 11:10 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் மேட்டத்தூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் 100 நாள் வேலைத்திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது பேசிய அமைச்சர் பெரியகருப்பன், "100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றுபவர்கள் தங்கள் பகுதி நலனுக்காக மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும்.

அமைச்சர் ஆய்வு

100 வேலை திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் ஒரு நாள் ஊதியமாக 273 ரூபாயை 300 ரூபாயாக உயர்த்தித் தர, தமிழ்நாடு முதலமைச்சரிடம் பரிசீலினை செய்யப்படும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடும் எண்ணம் இல்லை - அமைச்சர்பெரியகருப்பன்

ABOUT THE AUTHOR

...view details