கள்ளக்குறிச்சிமாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கம் கிராமத்தில் ஒதுக்குப்புறமாக வயல்வெளி பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ். இவர் வழக்கம்போல் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வெளியில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது நள்ளிரவில் யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இந்தச் சத்தம் கேட்டு அப்போது பிரகாஷ் எழுந்து பார்த்தபோது, 5 நபர்கள் வீட்டிலிருந்து ஓடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர், பிரகாஷ் அவர்களை பிடிக்க முயற்சித்தபோது கொள்ளையர்கள் அங்கிருந்து காரில் ஏறி உளுந்தூர்பேட்டை மார்க்கமாக தப்பிச் சென்றனர். இதற்கிடையே அவர்கள், அவ்வழியில் காரில் சென்ற அக்கும்பல் ரயில்வே கேட் மூடப்பட்டு இருந்ததையும் பொருட்படுத்தாமல், சினிமாவில் வரும் காட்சிகளைப் போல ரயில்வே கேட்டை உடைத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர், பிரகாஷ் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.20 லட்சம் திருடு போனது தெரியவந்தது. இதனையடுத்து, உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இறுதிப் பயணத்திற்கு கூட பாதையில்லை : 60 ஆண்டுகளாகத் தவிக்கும் கிராம மக்கள்!