கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள ஈய்யனூர் ஊராட்சிக்குட்பட்ட மகரூர் கிராமத்தில் வசித்து வருபவர் குமாரசாமி. இவர் வழக்கம் போல் இரவு உணவை முடித்துவிட்டு, அருகிலுள்ள தனது மகனின் வீட்டிற்கு உறங்கச்சென்றார்.
இதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள், குமாரசாமி வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த 13 சவரன் தங்க நகை, ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர்.
இதையடுத்து குமாரசாமி இன்று (செப்டம்பர் 17) காலை வீட்டுக்கு வந்த பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த நகை, பணம் திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து குமாரசாமி அளித்த புகாரின் அடைப்படையில் வழக்குப்பதிவு செய்த வரஞ்சரம் காவல்துறையினர், குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ராஜஸ்தான் படகு விபத்து: 5 பேர் மீது வழக்குப்பதிவு