கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அருகே பாவந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னதம்பி, தனக்குச் சொந்தமான பசு மாடு, கன்றுவை வழக்கம்போல் மேய்ச்சலுக்குப் பிறகு நேற்று இரவு மாட்டு கொட்டகையில் கட்டியுள்ளார். நேற்று இரவு மழையின்போது பலத்த காற்று வீசியதோடு மட்டுமில்லாமல் மாட்டுகொட்டகை மீது மின்னல் தாக்கியுள்ளது.
மின்னல் தாக்கி ஒன்பது மாத சினை பசுவும், கன்றும் உயிரிழப்பு!
ரிஷிவந்தியம் பகுதியில் நேற்று பெய்த கனமழையின்போது மின்னல் தாக்கியதில், பாவந்தூரில் சினைப்பசுவும், கன்றும் உயிரிழந்தன.
மின்னல் தாக்கி ஒன்பது மாத சினை பசும்,கன்றுக்குட்டியும் உயிரிழப்பு
இதனால் மாட்டுகொட்டகை இடிந்து விழுந்ததில் பசு மாடு, கன்று உயிரிழந்தன. உயிரிழந்த பசு மாடு ஒன்பது மாதம் சினை என்பதும் குறிப்பிடத்தக்கது. சினை மாடு உயிரிழந்த சம்பவம் சின்னதம்பி குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:உளுந்தூர்பேட்டையில் ஏரி ஆக்கிரமிப்பு: விவசாயிகள் சாலை மறியல்