தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனியாமூர் பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் - Collector

கலவரத்தால் பாதிக்கப்பட்ட சின்னசேலம் தனியார் பள்ளியை விரைவாக சீரமைத்து படிப்படியாக நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி; கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியை விரைவாக சீரமைத்து படிப்படியாக நேரடி வகுப்புகள் தொடங்கப்படும்-மாட்ட ஆட்சியர்
கள்ளக்குறிச்சி; கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியை விரைவாக சீரமைத்து படிப்படியாக நேரடி வகுப்புகள் தொடங்கப்படும்-மாட்ட ஆட்சியர்

By

Published : Jul 27, 2022, 8:49 AM IST

கள்ளக்குறிச்சி:சின்னசேலம் அருகே கனியாமூரில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் கடந்த 13ம் தேதி +2ம் வகுப்பு படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் தனியார் பள்ளியில் இருந்த வாகனங்கள், பொருட்கள் அனைத்தும் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டதோடு, தீ வைத்தும் கொளுத்தப்பட்டது. இதனால் பள்ளி கட்டடம் முழுவதும் பெரும் சேதமடைந்தது.

இதனால் அந்த பள்ளியில் படித்து வந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி தொடர முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடனான கருத்துக் கேட்பு கூட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் திரு.ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி; கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியை விரைவாக சீரமைத்து படிப்படியாக நேரடி வகுப்புகள் தொடங்கப்படும்-மாட்ட ஆட்சியர்

இதில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு அருகில் உள்ள மற்ற தனியார் பள்ளிகளிலோ அல்லது அரசு பள்ளிகளிலோ சேர்த்து படிக்க வைக்க விரும்பினால் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வேண்டிய வசதிகளை செய்து கொடுக்க தயாராக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் திரு.ஷ்ரவன் குமார் தெரிவித்தார். அப்போது பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளிகளில் சேர்க்க விருப்பம் இல்லை என்றும் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு சீரமைத்து வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தின விழாவை பள்ளியில் கொண்டாடும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையடுத்து கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியை விரைவாக சீரமைத்து படிப்படியாக நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனியார் பள்ளியில் இருந்த சான்றிதழ்கள் அனைத்தும் தீயில் எரிந்துவிட்டதால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு வேண்டிய சான்றிதழ்களை வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் திரு.ஷ்ரவன் குமார் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

ABOUT THE AUTHOR

...view details