கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையை அடுத்த எறையூர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராஜசேகர். இவர் தனது தெருவில் உள்ள சிறுமிகளுக்கு, மிமிக்ரி செய்து காட்டுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று (ஜூன்.20) பதிமூன்று வயது சிறுமிக்கு, மிமிக்ரி கற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி, ராஜசேகர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் முன்னதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.