கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ள அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், திருக்கோயிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து, விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை விற்பனை செய்வது வழக்கம்.
இந்நிலையில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா தொற்று அதிக அளவில் பரவிவருகிறது. இதனால் அதனைத் தடுக்கும் விதமாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூடப்படுவதாக கொள்முதல் விற்பனையாளர்கள் அறிவித்தனர். எனவே விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.