கள்ளக்குறிச்சி: பொராசக்குறிச்சி கிராமத்தில் அதிகப்படியான கள்ளச்சாராயம் விற்பதைக் கண்டித்து ஊர் பொதுமக்கள் கள்ளக்குறிச்சி-அடரி சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
மேலும், 150 லிட்டருக்கு மேற்பட்ட கள்ளச்சாராயத்தையும் பேரலுடன் சாலையின் நடுவே வைத்து சாராய விற்பவர்களைக் கைதுசெய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வரஞ்சரம் காவல் துறையினர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.