கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியோவுல் ஹக் உத்தரவின்பேரில் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கூடுதல்கண்காணிப்பாளர் சங்கர் தலைமையிலான காவல் துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஆவணங்களின்றி வந்த வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு - உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் வாகன சோதனை
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் முறையான ஆவணங்களின்றி வந்த வாகன ஓட்டிகள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

அப்போது அவ்வழியாக வாகன உரிமம் இன்றியும், ஓட்டுநர் உரிமம் இன்றியும், முகக்கவசங்கள் இன்றியும், தலைக்கவசம் அணியாமலும் வந்த இருசக்கர வாகனங்களை நிறுத்தி காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
முறையான ஆவணங்கள் இன்றியும், தலைக்கவசம் அணியாமலும் வந்த 150-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 30-க்கும் மேற்பட்ட வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.
இந்த வாகன சோதனையின்போது உளுந்தூர்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார், உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் எழிலரசி உடனிருந்தனர்.