தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்சியின் பெயருக்கு இழுக்கு வரும் நடவடிக்கையில் தலைமை ஈடுபடாது - பிரேமலதா விஜயகாந்த் - Premalatha Vijayakanth

கள்ளக்குறிச்சி: கட்சியின் பெயருக்கு இழுக்கு வரும் நடவடிக்கையில் தேமுதிக தலைமை ஒருபோதும் ஈடுபடாது என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

Premalatha Vijayakanth said DMDK will not be involved in the name-dragging operation
Premalatha Vijayakanth said DMDK will not be involved in the name-dragging operation

By

Published : Feb 28, 2021, 10:22 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கழகச் செயலாளர் எஸ்.எஸ். கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்தச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு கழக நிர்வாகிகளுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், "தேமுதிகவின் தன்மானத்திற்கு இழுக்கு வருவதற்கான ஒரு விழுக்காடு நடவடிக்கைகளிலும் தலைமைக்கழகம் முடிவு எடுக்காது. தேமுதிக தனித்துப் போட்டியிடுவதையே நான் விரும்புகிறேன்.

ஆனால் விஜயகாந்த், கழகத் தோழர்களின் ஆலோசனையின்படி வாக்குகளைப் பெறுவதுவிட வெற்றி பெறுவதே முக்கியம் என்பதால் கூட்டணி அமைக்கின்றோம்.

பெயருக்கு இழுக்கு வரும் நடவடிக்கையில் தேமுதிக ஈடுபடாது

விரைவில் நமக்கான காலம் வரும். தற்போதும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டால் 10 விழுக்காடு வாக்குகளைப் பெறும்.

கழக நிர்வாகிகள் அனைவரும் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் அல்லது கூட்டணி வைத்துப் போட்டியிட்டாலும் விஜயகாந்த் கை காட்டும் வேட்பாளர்களுக்கு தீவிரமாக வாக்கு சேகரித்து அவரை வெற்றிபெறச் செய்ய அனைவரும் அயராது பாடுபட வேண்டும்" என அறிவுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details