தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்பத் தகராறு: 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி தற்கொலை! - pregnant woman suicide with 2 children

கள்ளக்குறிச்சி: கீழாத்துக்குழியில் குடும்பத் தகராறு காரணமாக 7 மாத கர்ப்பிணி தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

pregnant-woman-commits-suicide
pregnant-woman-commits-suicide

By

Published : Nov 14, 2020, 5:39 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை, மணியார் பாளையம் அருகே உள்ள கீழாத்துக்குழியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். அவருக்கு ரேவதி என்னும் மனைவியும், 5 மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர்.

ஈஸ்வரன்-ரேவதி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததாக கூறப்படுகிறது. அதேபோல நேற்று (நவ. 13) இரவும் ஏற்பட்ட தகராறு காரணமாக ரேவதி இரண்டு குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறி உள்ளார்.

அதைத்தொடர்ந்து அவர்களை இரவு முழுவதும் உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அவர்களின் வீட்டின் அருகிலுள்ள விவசாய கிணற்றில், மூவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

தகவலறிந்த கரியாலூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதல்கட்ட விசாரணையில் தற்கொலை என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:கர்நாடகாவில் 3 குழந்தைகளைக் கொன்று தந்தை தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details