தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாங்காத பரிசுக்கு வந்த குறுஞ்செய்தி: சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் - டும்ப அட்டைதாரர்களும் பரிசுப் பொருளினை வாங்கியதாக குறுந்தகவல்

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு வாங்காத குடும்ப அட்டைதாரர்களும் பரிசுப் பொருளினை வாங்கியதாக குறுந்தகவல் அனுப்பப்பட்டதால் பொரசக்குறிச்சி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

pongal price issue in porachakurichi people held road blockage protest
pongal price issue in porachakurichi people held road blockage protest

By

Published : Jan 11, 2021, 12:13 PM IST

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும், அதோடு 2500 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடைகளில் விநியோகம் செய்துவருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் பொராசக்குறிச்சி கிராமத்தில் சுமார் 1800-க்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இந்நிலையில் பொராசக்குறிச்சி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு வழங்காமல், பரிசு வழங்கப்பட்டதாக அவர்களது மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் வந்துள்ளது.

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நியாயவிலைக் கடை ஊழியர் மீரா பாயைக் கண்டித்து கள்ளக்குறிச்சி வேப்பூர் சாலை நடுவே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரிஷிவந்தியம் சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி சார் ஆட்சியரிடம் தொலைபேசி வாயிலாகக் கேட்டுக்கொண்டார்.

அதன்படி விரைந்து விசாரணை செய்து இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வைப்பதாக அவர் உறுதி அளித்ததன்பேரில் பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க: நெல்லையில் பொங்கல் பரிசுடன் ஓட்டம் பிடித்த ரேஷன் கடை ஊழியர்!

ABOUT THE AUTHOR

...view details