தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை மற்றவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை - ராமதாஸ்

வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மற்றவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என கள்ளக்குறிச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளார்.

ராமதாஸ் பேச்சு
ராமதாஸ் பேச்சு

By

Published : Dec 10, 2021, 5:59 PM IST

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சியிலுள்ள தனியார் மண்டபத்தில் ஜி.கே. மணி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட ராமதாஸ் பேசுகையில், “மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலுள்ள வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற்றதை மற்றவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியில் போட்டியிட்ட 23 தொகுதிகளிலும் பாமக வெற்றிபெற்றிருந்தால் அடுத்த ஆளுங்கட்சி பாமக வந்திருக்கும் என மக்கள் நினைத்திருப்பார்கள். ஆனால், நாம் எங்கோ தவறிவிட்டோம், இனி தவறக் கூடாது" என்றார்.

ராமதாஸ் பேச்சு

தொடர்ந்து பேசுகையில், எங்கே போனது நமது வீரம், எங்கே போனது நமது விவேகம், எங்க போனது நமது உழைப்பு? என தொண்டர்களை நோக்கி வீராவேச கேள்விக்கணைகளை வீசினார். இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜா உள்ளிட்ட பாமகவைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:தேசியவாதிகளை கைதுசெய்யும் அறிவாலய அரசு - அண்ணாமலை கடும் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details