தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்! - சாலை மறியல் போராட்டம்

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உள்பட்ட சிதம்பரம் பிள்ளை பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என அப்பகுதி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

people-staged-road-roko-in-kallakurichi
குடிநீர் பிரச்னை தீர்க்க சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்!

By

Published : Jul 2, 2021, 6:45 AM IST

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உள்பட்ட சிதம்பரம் பிள்ளை தெரு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் சூழ்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள குடிநீர் குழாய் சேதம் அடைந்திருப்பதாகவும், அப்பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், முறையாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று (ஜூலை 1) கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோடு பகுதியின் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல்துறையினர், கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன் ஆகியோர் பொதுமக்களிடையே நேரில் வந்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் பிரச்சினை சரி செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் விரைவில் செய்யப்படும் என நகராட்சி ஆணையர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால், கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோடு பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:லாரியின் மீது ஆட்டோ மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details