தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தவறான அறுவை சிகிச்சையால் பெண் கவலைக்கிடம் - உறவினர்கள் ஆர்ப்பாட்டம் - சின்னசேலம்

சின்னசேலம் அருகே குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண் கவலைக்கிடமாக இருப்பதால் தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்ட தனியார் மருத்துவமனையைக் கண்டித்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்

By

Published : Oct 4, 2021, 11:10 PM IST

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகேயுள்ள நாககுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர், சந்திரலேகா. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக கர்ப்பம் அடைந்த நிலையில், குழந்தை வேண்டாம் என முடிவெடுத்து சின்னசேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று கருக்கலைப்பு செய்துவிட்டு, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்து கொள்ள அணுகியுள்ளார்.

தனியார் மருத்துவமனை நிர்வாகம் சந்திரலேகாவிற்கு கருக்கலைப்பு செய்தவுடன் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து சந்திரலேகாவிற்கு உதிரப் பெருக்கு ஏற்பட்டு, நிற்காமல் உடல் நலிவுற்று அவதிக்குள்ளாகியுள்ளார்.

மேலும், வேறு மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கிருந்த மருத்துவர்கள், ’நீங்கள் முதலில் சென்ற மருத்துவமனையை அணுகவும். அங்கு என்ன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது எனக் கேட்டதற்குத் தெரியாது’ எனக் கூறியுள்ளனர். மீண்டும் அவர்கள் சின்னசேலம் தனியார் மருத்துவமனையை அணுகியுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் செய்த உறவினர்கள்

அப்போது அறுவை சிகிச்சை மேற்கொண்ட அந்த மருத்துவமனை நிர்வாகம் சந்திரலேகா சிகிச்சைக்கு அனுமதிக்காமல் திரும்பிச் செல்லுமாறு கூறியுள்ளனர். இந்நிலையில் சந்திரலேகாவின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து கவலைக்கிடமான நிலைக்குச் சென்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்

இதனால் ஆத்திரமடைந்த சந்திரலேகாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:இலவச சிகிச்சை தொடரும் - ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details