தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு! - tamilnadu latest news

கள்ளக்குறிச்சி: சிறுவத்தூர் கிராமத்தில் ரயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சுரங்கப்பாதை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
சுரங்கப்பாதை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

By

Published : Feb 9, 2021, 5:09 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவத்தூர் கிராமத்தில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட்டை அகற்றி விட்டு சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி சின்னசேலம் வழியாக விருத்தாசலத்தை இணைக்கும் வகையில் ரயில்வே வழித்தடங்கள் உள்ளன.

சுரங்கப்பாதை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

இங்குள்ள ஆளில்லா ரயில்வே கேட்டுகளை அகற்றிவிட்டு, அங்கு சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஒரு சில முக்கிய வழித்தடங்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், சுரங்கப்பாதை அமைப்பதால் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படும் என்று கூறி, தங்களுக்கு சுரங்கப்பாதைக்கு பதிலாக மேம்பாலம் அமைத்துத் தரவேண்டும் என்று, சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே சாலையில் 20 அடி பள்ளம்
!

ABOUT THE AUTHOR

...view details