தமிழ்நாடு

tamil nadu

உயிரிழந்த நர்சிங் கல்லூரி மாணவி குடும்பத்தை நேரில் சந்தித்து எம்.பி.  நிதியுதவி!

By

Published : Apr 21, 2021, 12:07 AM IST

கள்ளக்குறிச்சி : காதலித்து திருமணம் செய்ய மறுத்ததால் படுகொலை செய்யப்பட்ட நர்சிங் கல்லூரி மாணவி குடும்பத்தை நேரில் சந்தித்து நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் நிதியுதவி செய்தார்.

உயிரிழந்த நர்சிங் கல்லூரி மாணவி குடும்பத்தை நேரில் சந்தித்து நிதியுதவி அளித்தார் விழுப்புரம் எம்.பி. துரை ரவிக்குமார் நிதியுதவி
உயிரிழந்த நர்சிங் கல்லூரி மாணவி குடும்பத்தை நேரில் சந்தித்து நிதியுதவி அளித்தார் விழுப்புரம் எம்.பி. துரை ரவிக்குமார் நிதியுதவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த தேவியானந்தலில், சென்ற ஏப்ரல் 2 ஆம் தேதி சரஸ்வதி என்ற நர்சிங் கல்லூரி மாணவி வீட்டின் பின்புறம் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காரணத்தால், அவரது காதலனே துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் வழக்கில் தொடர்புடைய மூவரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

உயிரிழந்த நர்சிங் கல்லூரி மாணவி குடும்பத்தை நேரில் சந்தித்து நிதியுதவி அளித்தார் விழுப்புரம் எம்.பி. துரை ரவிக்குமார் நிதியுதவி.

இந்நிலையில் நேற்று (ஏப்.18) படுகொலை செய்யப்பட்ட சரஸ்வதியின் குடும்பத்தினரை, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான துரை. ரவிக்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் சரஸ்வதியின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவியும் வழங்கினார்.

இதையும் படிங்க : 'வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள இடங்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது' - கமல்

ABOUT THE AUTHOR

...view details