தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்டு சாலை மறியல்! - கள்ளக்குறிச்சியில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவி இறப்பிற்கு நீதி கேட்டு மூன்றவாது நாளாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்டு கள்ளக்குறிச்சியில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியல்!
மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்டு கள்ளக்குறிச்சியில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியல்!

By

Published : Jul 15, 2022, 1:48 PM IST

கள்ளக்குறிச்சி:கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி என்பவர் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்ததில் உயிரிழந்தார். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவி ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி, தந்தை ராமலிங்கம் தாய் செல்வி மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


அந்த வகையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு இன்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:இளம்பெண் உயிரிழப்பு... பாஸ்தா காரணமா? - காவல்துறை விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details