தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு: உளுந்தூர்பேட்டையில் பிச்சையெடுக்கும் போராட்டம் - Opposition to agricultural law

கள்ளக்குறிச்சி: மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் திருத்தச்சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் உளுந்தூர்பேட்டையில் பட்டை நாமம் அணிந்து மண் சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

tvk
tvk

By

Published : Oct 6, 2020, 7:19 PM IST

மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் திருத்தச்சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளர் ராஜேஷ் தலைமையில் பட்டை நாமம் அணிந்து கையில் மண்சட்டி ஏந்தியவாறு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாநில கொள்கைபரப்புச் செயலாளர் திருப்பூர் சூடலை கலந்துகொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் விளக்கி அதனைத் திரும்பப் பெற வலியுறுத்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைகளில் திருவோடு ஏந்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details