கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (55). கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்ற பின்னர் குணமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் கறுப்புப் பூஞ்சை நோய்த் தொற்றுக்கும் உள்ளானார். இதனால் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிகிச்சைப் பெற்றுவந்தார்.
கள்ளக்குறிச்சியில் கறுப்புப் பூஞ்சையால் ஒருவர் உயிரிழப்பு - கள்ளக்குறிச்சியில் கறுப்பு பூஞ்சை தொற்று
கள்ளக்குறிச்சி: கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர், கறுப்புப் பூஞ்சை நோய்த் தொற்றால் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சியில் கறுப்பு பூஞ்சை தொற்றால் ஒருவர் உயிரிழப்பு
இந்நிலையில் இன்று (ஜூன் 3) சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். கறுப்புப் பூஞ்சை தொற்றால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாட்ஸ்அப் வாயிலாக கரோனா தொற்று இருப்பதைக் கண்டறியலாம்!