கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை பகுதியில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் திருடுபோயுள்ளன. இதனையடுத்து, உளுந்தூர்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிமொழியன் உத்தரவின்பேரில் திருநாவலூர் காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.
அப்போது திருநாவலூர் பகுதியில் சந்தேகப்படும்படியாகச் சுற்றித்திரிந்த நபரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை செய்ததில் அவர் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது.