கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை அருகே உள்ள கிராமம் வடமாமந்தூர். இந்த கிராமத்தை சேர்ந்த தொப்பைய கவுண்டர் எனபவரது மகன் இளையபெருமாள்(73) என்பவரை, அவரது அண்ணன் மொட்டைய கவுண்டர் என்பவரது இரண்டாவது மகன் சங்கர்(43) கட்டையால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
சொத்து தகராறு: முதியவர் கட்டையால் அடித்து கொலை! - சொத்து தகராறு
கள்ளக்குறிச்சி: சொத்து தகராறு காரணமாக 73 வயது முதியவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொத்து தகராறு காரணமாக சங்கர் என்பவர் பகண்டை கூட்டு சாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும், அது இளையபெருமாளுக்கு சாதகமாக முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த சங்கர், இளையபெருமாளை கண்டதும் கோபத்தில் தமது அருகில் இருந்த கட்டையை எடுத்து அவரது கழுத்து பகுதியில் அடித்துள்ளார். இதில் இளையபெருமாள் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் கழுத்து பகுதியில் இருந்து இரத்தம் வெளியேறிய நிலையில், அவர் நிகழ்விடத்திலேயே இறந்துள்ளார். பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த பகண்டை கூட்டு சாலை காவலர்கள், உடலை மீட்டு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
தப்பியோடிய சங்கரை அடுத்த இரண்டு மணி நேரத்தில் கைது செய்தனர். சொத்து தகராறு காரணமாக 73 வயது முதியவர் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.