தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கறுப்பு பேட்ஜ் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்! - கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி: அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

nurses
nurses

By

Published : Jan 29, 2021, 1:39 PM IST

தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சக்திவேல் தலைமையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தின் போது, தங்களது நீண்ட நாள் கோரிக்கையான மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம், படிகள் வழங்கிட வேண்டும்.

கரோனா தொற்று காலத்தில் உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றிய ஊழியர்களுக்கு அரசு அறிவித்த ஒரு மாத ஊதியம், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு நிவாரணம், இதில் உயிர்நீத்த செவிலியர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும். 6 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்பு பேட்ஜ் அணிந்து செவிலியர்கள் பணியில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details