தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்! - ராமநாதபுரம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கள்ளக்குறிச்சி, வேலூர், திருவாரூர், ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் ஆர்பாட்டம் நடத்தினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : Mar 19, 2020, 10:03 AM IST

மாநிலம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக,

கள்ளக்குறிச்சி:

மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் அதன் மாவட்டத் தலைவர் சாலிக் பாஷா, தலைமையில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை அம்பேத்கர் சிலை அருகில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் பெண்கள் உள்பட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும், மாநில பேச்சாளர் அபுபக்கர் , மாவட்ட செயலாளர் ஆர்கேஎம் மாலிக், மாவட்ட துணைச் செயலாளர் அமனு லாஹ், மாவட்ட வர்தகரணி சாதம் உசேன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர்:

அண்மையில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட NPR சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அண்ணா கலையரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், NPR சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் பங்கேற்றனர்.

திருப்பத்தூரில் நடைபெற்ற சிஏஏ போராட்டம்

திருவாரூர்:

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ந்து இஸ்லாமியர்கள் எதிர் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஆர்பாட்டம் நடத்தினர்.

கோவிட்-19 வைரஸ் அச்சம் காரணமாக பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட வேண்டாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில் இந்த போராட்டத்தில் ஒரே இடத்தில் முகமூடி எதுவும் அணியாமல்ஆயிரக்கணக்கான மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிஏஏ எதிர்ப்பு போராட்டம்

ராமநாதபுரம்:

அரசு பேருந்து பணிமனை முன்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பாக தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டத் தலைவர் முகமது அயூப்கான் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள்,குழந்தைகள் உட்பட 1000 பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ராமநாதபுரம் சிஏஏ போராட்டம்

தேனி:

உத்தமபாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பாக சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் போன்ற சட்டங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த சட்டங்களை கொண்டுவர மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தேனியில் நடந்த ஆர்பாட்டம்

இதையும் படிங்க: சிஏஏவை எதிர்த்து செல்போன் விளக்குகளை ஒளிரச்செய்து போராட்டம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details