தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உளுந்தூர்பேட்டையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் தொடங்கப்படும்' - உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய மக்களவை உறுப்பினர் துரை. ரவிக்குமார், விரைவில் உளுந்தூர்பேட்டை பகுதியில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.

எம்.பி துரை. ரவிக்குமார்
எம்.பி துரை. ரவிக்குமார்

By

Published : Jun 18, 2021, 8:46 AM IST

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வுமேற்கொண்ட விழுப்புரம் மக்களவை உறுப்பினர் துரை. ரவிக்குமார், மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கினார். அப்போது கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, தடுப்பூசி முகாம்கள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரோனா பெருந்தொற்று காலத்தில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இதற்கு உதவும் வகையில் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கியுள்ளேன். மேலும் இங்கே விரைவில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்படும்.

இங்கு மகப்பேறு பிரிவினர் சிறப்பாகச் செயல்படுகின்றனர். கரோனா பெருந்தொற்று காலம் முடிந்தால்கூட, இங்கு ஆக்ஸிஜன் தொடர்ந்து தேவைப்படுகிறது.

அதனால் தொற்று காலத்தைப் பயன்படுத்தி, மருத்துவமனையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது” என்றார்.

இதையும் படிங்க : கூடுதல் பணம் வசூலித்த 40 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை - அமைச்சர் தகவல்

ABOUT THE AUTHOR

...view details