கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரில், அம்மா நகரும் நியாயவிலைக் கடை வாகனங்களை சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தொடங்கி வைத்தார். கிராமப்புற மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் பொருள்களை அவரவர் இருப்பிடத்திற்கே சென்று வழங்கும் பொருட்டு, இந்த நகரும் நியாய விலைக் கடை வாகனங்கள் தொடங்கப்பட்டன.
அம்மா நகரும் நியாயவிலைக் கடை வாகனங்கள்: தொடங்கிவைத்த அமைச்சர் சி.வி. சண்முகம்! - கள்ளக்குறிச்சியில் பேசிய அமைச்சர் சண்முகம்
கள்ளக்குறிச்சி: திருநாவலூரில் அம்மா நகரும் நியாயவிலைக் கடை வாகனங்களை சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நியாயவிலைக் கடை வாகனங்கள்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிரான்குராலா, உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் குமரகுரு, கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பிறவி குறைபாடுகளுக்கு சிகிச்சையளிக்கும் சேவை மையம்!