தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய உயர்கல்வித்துறை அமைச்சர் - உங்கள் தொகுதியில் முதலமைச்சர்

உளுந்தூர்பேட்டை: "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டம் மூலம் பயனாளர்களுக்கு ரூ. 84 லட்சம் மதிப்பிலான நிலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

higher
higher

By

Published : Jun 5, 2021, 5:24 PM IST

Updated : Jun 5, 2021, 5:48 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா தலைமையில் நடைப்பெற்றது.

இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் தெளிப்பான் உள்ளிட்ட ரூ. 84 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து பொன்முடி கூறுகையில்," திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையின் போது அனைத்து தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்னும் திட்டம் மூலம் அப்பகுதியில் இருந்த மக்களின் குறைகளை மனுவாக பெற்றுக்கொண்டார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த குறைகள் நூறு நாள்களில் தீர்வு காணப்படும் என்றும், இதற்காக தனி குழு அமைக்கப்பட்டு, அதன் மூலம் குறைகளை தீர்வு காணப்படும் என்றும் ஸ்டாலின் கூறினார். அப்போது அதை கேட்டு சிரித்தவர்கள், திமுக ஆட்சிக்கு வந்து 30 நாள்கள் கூட ஆகாத நிலையில், இந்த திட்டம் செயல்பட்டு வருவதை கண்டு ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்" என்று பொன்முடி கூறினார்.

Last Updated : Jun 5, 2021, 5:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details