கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்திலுள்ள பட்டாசு கடையில் இன்று(அக்.26) மாலை எதிர்பாராத விதமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஐந்து பேர் உயிரிழந்தனர். தீக்காயமடைந்த 10 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் பட்டாசுகள் அருகிலிருந்த பேக்கரி, ஹோட்டல், மளிகைக்கடைகளில் சிதறியதால் அங்கிருந்த நான்கு சிலிண்டர்களும் வெடித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.