கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தை, காய்கறிச் சந்தை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி சுரங்கப் பாதைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளன.
கிருமி நாசினி சுரங்கப் பாதையைப் பார்வையிட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் - கிருமி நாசினி சுரங்க பாதையை பார்வையிட்ட அமைச்சர் சி.வி.சண்முகம்
கள்ளக்குறிச்சி: கரோனா வைரஸிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க காய்கறிச் சந்தை, மருத்துவமனை ஆகிய பகுதிகளில் திறக்கப்பட்டுள்ள கிருமி நாசினி சுரங்கப் பாதையை அமைச்சர் சி.வி. சண்முகம் பார்வையிட்டார்.
Shanmugam
இந்தச் சுரங்கப் பாதையை சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறையினர் ஆகியோரிடம் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர், மாவட்டக் கண்காணிப்பாளர், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.