கள்ளக்குறிச்சி மாவட்டம், வடபொன்பரப்பி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரங்கப்பனூர் கிராமத்திலுள்ள ஏரிக்கரையில் காவல் உதவி ஆய்வாளர் அகிலன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக அவ்வழியே, தலையில் சாக்கு மூட்டையுடன் வந்த ஒருவரை நிறுத்தி விசாரிக்க முயன்ற போது, அவர் தப்பியோடினார்.
ரூ 1.50 லட்சம் மதிப்பிலான சந்தனக்கட்டைகளை கடத்திய நபர் கைது! - சந்தனக்கட்டைகள் கத்திய நபர்
கள்ளக்குறிச்சி: வடபொன்பரப்பி ரங்கப்பனூர் கிராமத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சந்தனக்கட்டைகளை கடத்திச் சென்ற நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இருப்பினும் அவரை மடக்கி பிடித்த காவல் துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பது தெரியவந்தது. சாக்கு மூட்டையை ஆய்வு செய்ததில் ஒரு சந்தன மரத்தை 20 துண்டுகளாக வெட்டி சாக்குப்பையில் வைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. அதன் சந்தை மதிப்பு சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என காவல் துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
விசாரணையில், அவர் மீது திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் சந்தனக்கட்டைகள் கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து ராமச்சந்திரனை தனிப்படை காவல் துறையினர் வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.