தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர் பாட்டிலில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது - வரஞ்சரம் காவல் துறையினர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தண்ணீர் பாட்டிலில் கள்ளச்சாராயத்தை அடைத்து நூதன முறையில் விற்பனை செய்த நபரை கைதுசெய்த காவல் துறையினர், அவரிடமிருந்து 25 லிட்டர் கள்ளச் சாராயத்தையும் பறிமுதல்செய்தனர்.

 கள்ளச்சாராயத்தை விற்பனைசெய்த நபர் கைது
கள்ளச்சாராயத்தை விற்பனைசெய்த நபர் கைது

By

Published : Jun 5, 2021, 5:10 PM IST

கள்ளக்குறிச்சி அருகே உள்ள புக்கிரவாரி கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (34) என்பவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்துவருவதாக அருகிலுள்ள வரஞ்சரம் காவல் நிலைய காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இத்தகவலின் பேரில் விரைந்துசென்ற வரஞ்சரம் காவல் துறையினர் அங்கு கள்ளச்சாராயம் விற்றுக்கொண்டிருந்த ராஜ மாணிக்கத்தை கையும் களவுமாகப் பிடித்தனர்.

பிடிபட்ட ராஜமாணிக்கத்திடமிருந்து குடிநீர் பாட்டிலில் அடைக்கப்பட்ட 25 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் பறிமுதல்செய்தனர். மேற்கொண்டு காவல் துறையினர் ராஜமாணிக்கம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details