தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனியாமூர் பள்ளி கலவரம்... பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக 17 வயது சிறார் உள்பட 3 பேர் கைது - kaniyamur school

கனியாமூர் பள்ளி கலவரத்தின் போது பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக 17 வயது சிறார் உள்ளிட்ட மேலும் மூன்று பேரை சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

கனியாமூர் பள்ளி கலவரம்
கனியாமூர் பள்ளி கலவரம்

By

Published : Sep 6, 2022, 8:51 AM IST

கள்ளக்குறிச்சிமாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

அந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கைது செய்து வரும் நிலையில், கலவரத்தின் போது பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறார் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டப்பன் மற்றும் செல்வகாசி ஆகிய இருவரை வீடியோ ஆதாரங்களைக் கொண்டு சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட இருவரையும் சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகமது அலி முன்பு ஆஜர்படுத்தினர். தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட இருவரையும் 15 நாட்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 17 வயது சிறாரை 15 நாட்கள் செஞ்சி கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:சைபர் குற்றங்களை தடுக்க சமூக ஊடகக் குழு காவல்துறை அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details