கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 144 - தடை உத்தரவால் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், கல்வராயன் மலையில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு கடத்தி செல்லப்படுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமநாதன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் மோகூர், பெருவங்கூர் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் கள்ளச்சாராயம் கடத்தியவர்கள், விற்பனை செய்தவர்கள் என 7 பேரைக் கைது செய்து அவர்களிடமிருந்த 130 லிட்டர் கள்ளச்சாராயம், மூன்று இரு சக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கள்ளச்சாராயம் கடத்தலில் ஈடுபட்டவர்கள் இதேபோல், பெரியமாம்பட்டு, திம்மலை ஆகியப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த நான்கு பேரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்த 500 லிட்டர் கள்ளச்சாராயம், மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு லிட்டர் சாராயம் ரூ. 1200 முதல் 1500 வரை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நாமக்கல்லில் கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது, 10 லிட்டர் சாராயம் பறிமுதல்