தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோவில் கைது! - kallakuruchi district news

கள்ளக்குறிச்சி அருகே 13 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்.

kallakuruchi-youth-arrested-under-pokso-act
kallakuruchi-youth-arrested-under-pokso-act

By

Published : Aug 25, 2021, 10:22 AM IST

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் சத்தியமூர்த்தி. திருமணமாகி ஒன்பது வருடங்களாகும் நிலையில் மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்ந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சத்தியமூர்த்தி அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி இரவில் தனியாகச் சென்றபோது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் சத்தியமூர்த்தியை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பரமக்குடி அருகே விவசாயி அடித்துக் கொலை - இருவர் நீதிமன்றத்தில் சரண்

ABOUT THE AUTHOR

...view details