கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது எறையூர் கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து சோதனை நடத்தியபோது அவரிடம் அனுமதி இல்லாத நாட்டுத் துப்பாக்கி இருப்பது தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இளைஞர் கைது! - எறையூர்
கள்ளக்குறிச்சி: எறையூர் கிராமத்தில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த இளைஞரை, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் கைதுசெய்தனர்.
Possessing Firearm
இதனைத்தொடர்ந்து அந்த இளைஞரைப் பிடித்து விசாரணை செய்ததில் அவர் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜான்மில்க்யூர் என்பது தெரியவந்தது, அவரைக் கைதுசெய்த காவல் துறையினர் அவரிடமிருந்த ஒரு நாட்டுத் துப்பாக்கியைப் பறிமுதல்செய்தனர்.
வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக இந்த நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Last Updated : Dec 1, 2020, 9:30 AM IST