கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நல்லகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான சிவகுமார் என்பவருக்கும் நயினார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுபலட்சுமிக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் இருக்கும் நிலையில் தற்போது சுபலட்சுமி கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இவர் நேற்று தனது தாய் கிராமமான நைநாகுப்பம் கிராமத்திலிருந்து தனது தாயுடன் தனியார் பேருந்தில் உளுந்தூர்பேட்டைக்குப் பயணம் செய்துள்ளார். அப்போது 10 மாத கர்ப்பிணி சுபலட்சுமிக்கு திடீரென வலி ஏற்பட்டுத் துடிதுடித்த நிலையில் பேருந்திலேயே பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இதனை அறிந்த பேருந்து ஓட்டுநர் பயணிகளுடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்றார்.