தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்யும் கிராமம்- அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு

நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள கிராம மக்கள் தங்களது கூரை வீடுகளை தார்ப்பாய் போட்டு மூடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

நிவர் புயலை எதிர்கொள்ள தயாராகும் கிராம மக்கள்
நிவர் புயலை எதிர்கொள்ள தயாராகும் கிராம மக்கள்

By

Published : Nov 25, 2020, 1:01 PM IST

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயல் இன்றிரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எஸ்.குச்சிப்பாளையம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் தாழ்வு பகுதியான இந்த கிராமத்தில் 90 சதவிகிதம் கூரை வீடுகளும் 10 சதவிகிதம் ஓட்டு வீடுகளும் உள்ளதால் சாதாரண மழைக்கே வீடுகளிலும் தெருக்களிலும் தண்ணீர் புகுந்து கிராம மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது.

எனவே கிராம மக்கள் தங்கள் கூரை வீடுகளின் பாதுகாப்பு கருதி அவரவர் கூரை வீட்டின் மேல் தார்ப்பாய் போட்டு மூடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஓட்டு வீட்டில் வசிக்கும் மக்கள் புயல்காற்றில் ஓடுகள் பறக்கும் என்பதால் வீடுகளின் மேல் உள்ள ஓடுகளை அவிழ்த்து பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு மூன்று நாட்களாகியும், கிராமத்திற்கு அலுவலர்கள் யாரும் புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வராததால், கிராம மக்களே தங்களது பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:#LiveUpdates தீவிரமடையும் நிவர் புயல் - தகவல்கள் உடனுக்குடன்...

ABOUT THE AUTHOR

...view details