தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜய் சேதுபதியை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள் - போஸ்டரால் பரபரப்பு! - விஜய் சேதுபதி புதிய படம்

கள்ளக்குறிச்சி: விஜய் சேதுபதியின் புதிய படம் வெளியாகி இருக்கும் நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்
சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்

By

Published : Oct 3, 2020, 12:35 PM IST

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளியான க/பெ ரணசிங்கம் திரைப்படத்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் சேதுபதி ரசிகர்கள் போஸ்டர் அடித்துள்ளனர்.

அதில், “மக்களின் ஒருவனே, மக்களுக்கான ஒருவனே, எங்கள் மக்கள் செல்வனே விரைவில் வருக, விவசாயிகளை அழிக்க நினைக்கும் காலத்தில் விவசாயத்தை தூக்கிப்பிடிக்கும் எங்கள் விவசாயி" என அரசியல் நெடி தூக்கலாக விஜய் சேதுபதியின் அரசியல் வருகையை எதிர்நோக்கும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்

தற்போது இந்த போஸ்டர் மாற்று கட்சியினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் செல்வன் என்று ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் விஜய் சேதுபதி தனது அரசியல் அத்தியாயத்தை தொடங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஜய் ரசிகர்கள், சூர்யா ரசிகர்கள் அரசியல் சம்பந்தமான போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது விஜய் சேதுபதியின் ரசிகர்கள் விஜய் சேதுபதியை அரசியலுக்கு அழைக்கும் விதமாக போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஐ.லியோனி போஸ்டர் கிழிப்பு!

ABOUT THE AUTHOR

...view details