கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக விஜய் ரசிகர்கள் சார்பில் தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டபட்டு வருகிறது.
'புரட்சி தமிழனே வா' - விஜய்க்கு ஆதரவான போஸ்டரால் சலசலப்பு! - விஜய்க்கு ஒட்டப்பட்ட போஸ்டர்கள்
கள்ளக்குறிச்சி: நகர விஜய் ரசிகர்கள் சார்பில், விஜய்க்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (செப்.15) கள்ளக்குறிச்சி நகர பகுதியில் ஒட்டபட்டுள்ள ராட்சத போஸ்டரில் புரட்சி தலைவர் எம்.ஜி ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா, புரட்சி தமிழன் விஜய் என்ற வாசகங்களுடன் ஒட்டியுள்ளனர்.
மேலும் இளைஞர்களின் வேலைவாய்ப்பை உருவக்கிடவும், அவர்களின் வாழ்வாதாரத்தை காத்திடவும், 'சட்டமன்றத்தில் கையெழுத்திட வா' என 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு அழைக்கும் விதமாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தொடர்ந்து விஜய் அரசியலுக்கு அழைக்கும் விதமாக ஒட்டபட்டு வரும் ரசிகர்களின் போஸ்டர்கள் தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.