கள்ளக்குறிச்சி: கனியாமூர் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தார். இந்நிலையில் பள்ளி மாணவி உயிரிழந்த ஜூலை 13ஆம் தேதி இரவு 7 மணி அளவில் பள்ளி நிர்வாகிகளுடன் பள்ளி மாணவியின் தாய் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியதற்கான ஆதாரம் தற்போது வெளியாகியுள்ளது.
Viralஆகும் கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் பள்ளி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட புகைப்படம் - srimathi
கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில் பள்ளி மாணவியின் பெற்றோர் பள்ளி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மாணவியின் பெற்றோர் பள்ளி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட புகைப்படம்
பள்ளி மாணவியின் தாய் தரப்பில், பள்ளி மாணவியின் தாய் உள்ளிட்ட ஒன்பது பேர் இந்தப் பேச்சுவார்த்தையில் இருந்ததற்கான ஆதாரம் வெளியாகியுள்ளது. பள்ளி மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்த நிலையில் அன்றைய தினமே பேச்சுவார்த்தை பள்ளி வளாகத்திற்குள் நடைபெற்றதற்கான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க:தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..உதவி பேராசிரியர் வேறு துறைக்கு மாற்றம்