தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்: டிஎன்பிஎஸ்சி தேர்வு மையம் மாற்றம் - Kallakuruchi News Today

கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு மையம் வேறு தனியார் ஒரு பள்ளிக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது அங்கு தேர்வு நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்: டிஎன்பிஎஸ்சி தேர்வு மையம் மாற்றம்
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்: டிஎன்பிஎஸ்சி தேர்வு மையம் மாற்றம்

By

Published : Jul 24, 2022, 11:03 AM IST

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எழுதுபவர்களுக்காக சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டது. அப்பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்பாக நடைபெற்ற போராட்டம், கலவரமாக மாறி அப்பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்: டிஎன்பிஎஸ்சி தேர்வு மையம் மாற்றம்

இதனையடுத்து, தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு இன்று (ஜூலை 24) நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்வு எழுதுபவர்களுக்கான மையம் கள்ளக்குறிச்சியில் உள்ள வேறு ஒரு தனியார் பள்ளிக்கு மாற்றப்பட்டது. மாற்றப்பட்ட மையத்தில் 1200க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் - மூன்றாவது உடற்கூராய்வு தேவையில்லை

ABOUT THE AUTHOR

...view details