தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளக்குறிச்சியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டம் - அனைத்துக் கட்சிக் கூட்டம்

கள்ளக்குறிச்சி: அரசு அனுமதியின்றி எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களை நகராட்சி ஊழியர்கள் மூலம் அழிக்கப்படும் என காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் கூறியுள்ளார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

By

Published : Aug 4, 2020, 8:21 PM IST

கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது ராமநாதன் கூறியதாவது, "தமிழ்நாட்டில் தொடர்ந்து தலைவர்களின் சிலைகள் அவமதிப்பு நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பெரியார் நீர்வீழ்ச்சியில் பெரியார் பெயருக்கு காவி சாயம் பூசப்பட்டது. அது போல திருக்கோவிலூர் அருகே கீழையூரில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது.

இதற்கு அனைத்து கட்சியினரும் தொண்டர்களுக்கு அறிவுரை கூறி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருக்கோவிலூரில் சுவர் விளம்பரத்தில் இரு கட்சியினர் இடையே ஏற்பட்ட பிரச்னையை அடுத்து இதுபோன்ற அசம்பாவிதம் நடைபெறாத வண்ணம், கள்ளக்குறிச்சியில் அரசு அனுமதியின்றி எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களை நகராட்சி ஊழியர்கள் மூலம் அழிக்கப்படும்.

அரசு சுவர்களில் அனுமதி பெற்று தான் சுவர் விளம்பரங்கள் எழுத வேண்டும். அவ்வாறு அனுமதியின்றி சுவர் விளம்பரம் எழுதுபவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்" என மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராமநாதன் எச்சரித்தார்.

ABOUT THE AUTHOR

...view details