தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் காவலர் உயிரிழப்பு! - வாகனம் மோதியதால் காவலர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: புக்குளம் மேம்பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

police officer died
police officer died

By

Published : Jun 26, 2020, 8:28 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்தவர் கோபி (39). இவர் கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்துவந்தார். இவரது மனைவி காஞ்சனா, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

தியாகதுருகம் காமராஜ் நகரில் குடும்பத்துடன் வசித்துவந்தார். இந்த நிலையில் வழக்கம்போல் அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு நேற்றிரவு தனது பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது தியாகதுருகம் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது புக்குளம் மேம்பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தலையில் படுகாயமடைந்த கோபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் காவல் உதவி ஆய்வாளர் நந்தகோபால், காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி கள்ளக்குறிச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details