சென்னை:கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவி தற்கொலை குறித்த விவகாரத்தில் முதலில் அவரின் தாய் தந்தையிடம் இருந்து இன்று விசாரணையை துவக்குவதற்கு தமிழ்நாடு மாநில குழந்தை பாதுகாப்பு ஆணையம் திட்டமிட்டிருந்ததது.
தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார், துரைராஜ், முரளி ஆகியோர் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் இன்று விசாரணை செய்ய தயார் நிலையில் இருந்தனர்.