தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஊர்காவல் படை வீரர்கள் கோரிக்கை - பணி நிரந்தரம் செய்யவேண்டும்

கள்ளக்குறிச்சி: ஊர்காவல் படை வீரர்களை நடைபெறுகின்ற சட்டமன்ற கூட்ட தொடரில் காவல் துறை மானிய கோரிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் பணி நிரந்திரம் செய்ய வேண்டும்மென்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஊர் காவல் படை வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

saravanan
saravanan

By

Published : Mar 11, 2020, 12:07 AM IST

தமிழ்நாடு காவல் துறையில் ஒரு அங்கமாக வகிக்கும் மற்றும் ஊர் காவல் படை வீரர்கள் 15,622க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துவருகின்றனர். ஏற்கனவே நாள் ஒன்றுக்கு ரூ.65 வீதம் என இருந்ததை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2012ஆம் ஆண்டு நாள் ஒன்றுக்கு ரூ.150, எனஊதியத்தை உயர்த்தி மாதம் முழுவதும் 30, நாட்கள் வேலை கொடுத்ததால் மாதம் ஒன்றுக்கு ரூ.4500,மாத ஊதியம் கிடைத்தது. எனவே உச்ச நீதிமன்ற ஆணையின்படி நாள் ஒன்றுக்கு ரூ.560, என ஊதியத்தை உயர்த்திவிட்டு தமிழ்நாடு அரசு மாதம் முழுவதும் 30 நாள் வழங்கிய வேலையை திடீரென மாதத்தில் 5 நாள் மட்டும் வேலை என அறிவித்துள்ளதால் மாதம் ஒன்றுக்குரூ.2800, மட்டுமே மாத ஊதியம் கிடைத்து வருகின்றது.

இந்த சொற்ப ஊதியத்தை வைத்து எங்கள் குடும்பத்தை வழி நடத்த முடியவில்லை, நடைபெறுகின்ற சட்டமன்ற காவல் துறை மானிய கோரிக்கையில் ஊர்காவல் படை வீரர்களுக்கு மற்ற மாநிலங்களில் போல் உள்ள டெல்லி, பீகார் , மத்தியப் பிரதேசம், போன்ற மாநிலங்களில் ஊர்காவல் படை வீரர்களை பணி நிரந்தரம் செய்து மாத ஊதியம் ரூ. 22,000 , 30,000 வழங்குவது போல், தமிழ்நாடு முதலமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையில் ஒரு அங்கமாக இருக்கும் ஊர்காவல் படை வீரர்களை காவல் துறை மானியக் கோரிக்கையில் பணி நிரந்திரம் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி ஊர்காவல் படை வீரர்கள்

மேலும், தமிழ்நாட்டில் ஊர்காவல் படை வீரர்கள் 15,622 பேர் மிக சொற்ப ஊதியம் பெற்றுக்கொண்டு பணிபுரித்து வருகிறார்கள்.எனவே அவர்களது குடும்பத்தினர் வறுமைக் கோட்டிற்க்கு ஆட்பட்டு கடும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். தமிழ்நாடு காவல் துறைக்கு இணையாக பேருதவியாக செயல்பட்டு வரும் ஊர்காவல் படை வீரார்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்க பணி நிரந்தரம் ஆணையிட வேண்டுமென கள்ளக்குறிச்சி ஊர்காவல் படை வீரர் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details