கள்ளக்குறிச்சியில்1977-1978 ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த 108 மாணவர்கள் 45 ஆண்டுகளுக்கு பிறகு அதே பள்ளியில் சந்தித்து 60ஆம் கல்யாணம் செய்து கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்த நிகழ்வில் 108 முன்னாள் மாணவர்களும் தங்களது துணைவியாருடன் மாலை மாற்றிக் கொண்டனர். அதைத்தொடர்ந்து சஷ்டியப்த பூர்த்தி யாகம் செய்து மாங்கல்யம் வழங்கப்பட்டது. அதன்பின் ஒரே நேரத்தில் 108 பேரும் தாலி கட்டினர். இறுதியாக 108 தம்பதிகளுக்கும் 60 அகவை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் அவர்களது பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் முக்கிய பங்குவகித்தனர்.
45 ஆண்டுகளுக்கு பின் ரீயூனியன்... பள்ளியிலேயே 108 முன்னாள் மாணவர்களுக்கு 60ஆம் கல்யாணம்... - கள்ளக்குறிச்சியில் அறுபதாம் திருமணம்
கள்ளக்குறிச்சியில் 45 ஆண்டுகளுக்குப் பின் பள்ளியில் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள் 108 பேர் ஒரே நேரத்தில் 60ஆம் கல்யாணம் செய்து கொண்ட சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக சாதனைக்கான கலாம் விருது:இந்த 108 மாணவர்களின் ஆசிரியர்களும் வயது தளர்ந்த நிலையிலும், பள்ளிக்கு சென்று அவர்களை வாழ்த்தினர். ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 108 தம்பதிக்கு 60 ஆம் கல்யாணம் செய்யப்பட்டதால், உலக சாதனைக்கான கலாம் விருதும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதேநேரத்தில் 1987ஆம் ஆண்டு அரசுப்பள்ளியில் பயின்று அரசு பணியில் இருந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கான பணி நிறைவு பாராட்டு விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர் வேங்கடாபதி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மரக்கன்றுகள் நடும் விழாவில் நடிகர் விவேக்கின் மனைவி