கள்ளக்குறிச்சி கா.மானந்தல் சாலையில் உள்ள ஏ.கே.டி நகர் பகுதியில் ஷாபிபுல்லா என்பவருக்கு சொந்தமான தனியார் பட்டாசு தயாரிக்கும் கூடம் உள்ளது. இந்த கூடத்தில் இன்று வெடி விபத்து ஏற்பட்டதில் பணியாளர் ஏழுமலை என்பவர் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி பட்டாசு தயாரிக்கும் கூடத்தில் விபத்து: ஒருவர் பலி - பட்டாசு தயாரிப்பு கூடத்தில் விபத்து
கள்ளக்குறிச்சி அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் கூடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிந்துள்ளார்.

Kallakurichi Fire Accident
இந்த பட்டாசு தயாரிக்கும் கூடம் உரிமம் இன்றி செயல்பட்டு வந்ததாகவும், தொழிலாளி ஏழுமலை அப்பகுதியில் புகை பிடிக்கும்போது தீப்பொறிகள் வெடிபொருட்கள் மீது பட்டதில், இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வெடித்து சிதறிய இடங்களில் உள்ள தீயை அணைத்தனர். உள்ளூர் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.
பட்டாசு தயாரிப்பு கூடத்தில் விபத்து: ஒருவர் பலி
இதையும் படிங்க: தக்காளி பழங்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை