தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளக்குறிச்சியில் மீன் வளர்ப்பிற்கு தடைகோரி பாசன விவசாயிகள் போராட்டம்!

கள்ளக்குறிச்சி : ஏரியில் மீன் வளர்ப்பிற்கு தடை விதிக்கக்கோரி பொன்பரப்பட்டு பாசன விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

கள்ளக்குறிச்சியில் மின்வளர்ப்பிற்கு தடைக்கோரி பாசன விவசாயிகள் போராட்டம்!
கள்ளக்குறிச்சியில் மின்வளர்ப்பிற்கு தடைக்கோரி பாசன விவசாயிகள் போராட்டம்!

By

Published : Dec 23, 2020, 10:39 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக க.அலம்பளம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியது. இந்த ஏரியின் மூலம் பொன்பரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில் வடபொன்பரப்பட்டு பொதுமக்களின் அனுமதியைப் பெறாமல் ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர், தனக்குத் தெரிந்த நபர் ஒருவருக்காக, மீன் குஞ்சுகள் பொரிப்பதற்கான வலையைக் கட்டியுள்ளார். இதன் காரணமாக இந்த ஏரி தண்ணீரை நம்பியுள்ள பொன்பரப்பட்டு கிராமப் பாசன விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.

இதனையடுத்து க.அலம்பலம் ஏரியில் மீன் வளர்ப்பிற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி பொன்பரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தங்களின் கோரிக்கை வலியுறுத்தி மனு அளித்துத் திரும்பினர்.

இதையும் படிங்க...கேட்பாரற்று கிடக்கும் வரலாற்றுச் சின்னமான ‘ஆயி மண்டபம்’ : கண்டுக்கொள்ளுமா அரசு!

ABOUT THE AUTHOR

...view details