கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், விளை நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களை வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள் இரவு நேரங்களில் பயிர்களை நாசம் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
அதனால் தங்களுக்கு வனத் துறையினர் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும், மின்சாரத் துறை அலுவலகத்தில் பதிவுசெய்யக் காத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச மின்சார மோட்டார் சேவை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.