கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் தேமுதிக வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து விஜய பிரபாகரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு சுதீஷ் வெற்றி பெற்றிருந்தால், இந்தத் தொகுதியில் என்னென்ன வாக்குறுதி உள்ளதோ அதனை தனது சொந்த செலவில் செய்திருப்பார்.
ஆனால் தற்போது வெற்றிபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினரால் இந்த தொகுதிக்கு ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா? கள்ளக்குறிச்சி மாவட்டம் மட்டுமே ஆகியுள்ளது, வேறு எதுவும் நடக்கவில்லை. தற்போது கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயகுமார் வெற்றிபெற்றால், கேப்டன் இந்தத் தொகுதியில் நின்று வெற்றிபெற்றது மாதிரி.
நான் இன்று விஜயகாந்த் மகனாக இங்கு வரவில்லை, உங்களுடைய சகோதரனாக, நண்பனாக வந்துள்ளேன். கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால் அவருடன் சேர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நானே நேரில் வந்து இந்தத் தொகுதிக்கு தேவையானவற்றை செய்ய தயாராக இருக்கிறேன்.
என்றும் உங்கள் வீட்டு பிள்ளையாய், உங்கள் வீட்டு வேலைக்காரனாய் என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மக்களை காப்பாற்றுவதற்காக இன்று கேப்டனும், அண்ணன். டிடிவி தினகரன், எஸ்டிபிஐ கட்சியும் கூட்டணி சேர்ந்திருக்கின்றார்கள். காசுக்கு மாரடிக்கும் கூட்டம் தேமுதிக அல்ல, மக்களுக்காக உழைக்கும் கூட்டம் தேமுதிக. விஜயகுமாருக்கு வாக்குப்பெட்டியில் நான்காம் நம்பரில் ஒரு குத்து, கள்ளக்குறிச்சியில் தேமுதிகதான் கெத்து என்பதே நீங்கள் சொல்ல வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:எங்கு நின்றாலும் தொண்டர்கள் வெற்றிபெற வைப்பார்கள் - விஜய பிரபாகரன் நம்பிக்கை